உலகின் விலையுயர்ந்த மை

30 தை 2024 செவ்வாய் 06:38 | பார்வைகள் : 5738
ஜப்பானில் ‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதும் Calligraphy முறையானது, கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாகும்.
இந்த அழகான பழங்கால நடைமுறைக்கு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்வது அதற்கு பயன்படுத்தப்படும் மை தான்.
எனவே இந்த பதிவில் Japanese Calligraphy-க்கு பயன்படுத்தும் உலகிலேயே விலை உயர்ந்த மை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
Sumi’ என அழைக்கப்படும் ஜப்பானிய கேளிகிராஃபி மை, பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
இது புராதான முறையில் தாவர எண்ணெய், பைன் பிசின் மற்றும் எள் எண்ணெயை எரிப்பது மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. இதை உருவாக்குவதற்கான செயல்முறை மிகவும் கடினமானது.
இந்த மையில் விரும்பிய தரம் மற்றும் நிலைத்தன்மையை அடைய திறமையானவர்களின் பங்களிப்பு மிக முக்கியம். குறிப்பாக இதில் இயந்திரங்களின் பங்களிப்பு இல்லாமல் முழுக்க முழுக்க மனித உழைப்பில் உருவாக்கப்படுகிறது.
இதில் பயன்படுத்தப்படும் நிறமிகள் அரிதாகக் கிடைப்பவை.மற்றும் பிரீமியம் ரக பைண்டர்கள் உட்பட அனைத்துமே விலைமதிப்பற்ற பொருட்களின் கலவையில் இந்த மை தயாரிக்கப்படுகிறது.
பலவிதமான நிறங்களைப் பெறுவதற்கு பலவிதமான எண்ணெய்களை எரிக்கின்றனர்.
குறிப்பாக நீல நிறத்தைப் பெறுவதற்கு பைன் மரம் எரிக்கப்பட்டு அதன் மூலமாக வெளிப்படும் புகை மற்றும் பிசின் சேகரிக்கப்படுகிறது.
எனவே சுமி மையைத் தயாரிப்பது ஒரு நீண்ட நடைமுறையாகும்.
உலகின் விலையுயர்ந்த Japanese Calligraphy மை, ‘Bokuju’ என அழைக்கப்படுகிறது.
இந்த மை அதன் தரம், செயல்முறை மற்றும் மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் விதத்திற்காக அதிக விலை உயர்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட கைவினைக் கலைஞர்களால் தலைமுறை தலைமுறையாக பல நுட்பங்களைப் பயன்படுத்தி முழுவதும் கையாலேயே Bokuju-வை தயாரிக்கின்றனர்.
இந்த வகை மைகளைத் தயாரிக்க குறைந்தது 4 ஆண்டுகளாவது ஆகும். 200 கிராம் உயர்தர மையின் விலை 1000 முதல் 2000 டாலர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025