கொழும்பிற்கான சேவையை நிறுத்திய ஓமான் எயார்
29 தை 2024 திங்கள் 11:49 | பார்வைகள் : 12944
ஓமான் எயார் விமான நிறுவனம் தற்போதைய மாற்றத்தின் ஒரு பகுதியாக கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓமன் எயர் அதன் வலையமைப்பில் பல மூலோபாய மாற்றங்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மற்றும் பங்களாதேசத்தின் சிட்டகாங் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்படுள்ளது

























Bons Plans
Annuaire
Scan