இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்
28 தை 2024 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 5624
இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நவம்பர் 2023 இல் விதிக்கப்பட்ட தடை, இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை முறையாக நிர்வகிக்காமை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டது.
தடைசெய்யப்பட்டதில் இருந்து கிரிக்கெட் பேரவை நிலைமையைக் கண்காணித்து வந்ததுடன், இலங்கை கிரிக்கெட் கடமைகளை இனி மீறவில்லை என்பதில் திருப்தி அடைந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் மீதான தடை காரணமாக, தற்போது நடைபெற்று வரும் U-19 உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தமை குறிப்பிடத்தக்கது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan