வவுனியாவில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இளைஞன் சடலமாக மீட்பு
29 ஆடி 2023 சனி 06:25 | பார்வைகள் : 8939
வவுனியா பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலு, சடலத்தின் கழுத்துப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்தின் அடையாளம் காணப்படுவதுடன், கட்டுத்துப்பாக்கி ஒன்றும் குறித்த இளைஞரது மோட்டார் சைக்கிளும் அருகில் காணப்படுகிறது.
குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது வேறு பகுதியில் யாரேனும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு குறித்த பகுதியில் சடலத்தை வைத்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan