Paristamil Navigation Paristamil advert login

 சோயப் மாலிக் விளையாடுவதற்கான ஒப்பந்தம் ரத்து

 சோயப் மாலிக் விளையாடுவதற்கான ஒப்பந்தம் ரத்து

27 தை 2024 சனி 09:38 | பார்வைகள் : 3546


இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை 3 -வதாக திருமணம் முடித்தார்.

சோயப் மாலிக் மற்றும் சனா ஜாவத் திருமணத்திற்கு சோயப் மாலிக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. சோயப் மாலிக்கின் முழு குடும்பமும் சானியா மிர்சாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

சனா ஜாவத்த்தை திருமணம் முடித்த சோயப் மாலிக், அடுத்த நாளே வங்கதேசத்தில் நடைபெற்று வரும் Bangladesh Premier League போட்டியில் கலந்து கொண்டார். அதன்படி, பார்ச்சூன் பாரிஷால் அணிக்காக விளையாடி வரும் Shoaib Malik ஒரே நேரத்தில் மூன்று நோ பால்களை வீசினார்.

மெதுவாக ஓடிவந்து ஸ்பின் செய்யும் இவர் 3 நோ பால்களை வீசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. டெத் ஓவர்களில் 6 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதன்பின்னர், பிபிஎல் தொடரில் தங்களுடைய அணிக்காக சோயப் மாலிக் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பார்ச்சூன் பாரிஷால் அணி நிர்வாகம் அறிவித்தது.

இது தொடர்பாக அணி நிர்வாகம் தரப்பில், "வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரைப்படியே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று கூறியது.

சானியா மிர்சாவை விவாகரத்து செய்த சில நாட்களிலேயே சோயப் மாலிக்குக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்