யாழில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த இளைஞன் மீது வாள் வெட்டு
 
                    27 தை 2024 சனி 03:21 | பார்வைகள் : 5515
யாழ்ப்பாணத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன் (வயது 30) எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ்கிறீம் வாங்குவது போல பாசாங்கு செய்து, இளைஞனின் உடைமையில் இருந்த விற்பனை பணம், மற்றும் கைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்று இருந்தனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல் ஒன்று, வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan