Nitrogen Hypoxia மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய அமெரிக்கா!
26 தை 2024 வெள்ளி 11:41 | பார்வைகள் : 9121
உலகின் முதல் ‘நைதரசன் வாயு’ மரண தண்டனையை அமெரிக்க நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் – எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகிய இருவரிடமும் தலா 1000 டொலர் வழங்கி, தன் மனைவியைக் கொலை செய்ய கேட்டிருக்கிறார். இருவரும், 1988 ஆம் ஆண்டு எலிசபெத் சென்னட்டை கொலை செய்தனர். எலிசபெத் சென்னட் கொலை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் சார்லஸ் சென்னட் தற்கொலை செய்துக்கொண்டார்.
கொலை குற்றம்சாட்டப்பட கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இருவருக்கும் மரணதண்டனை விதித்தது.
இதில், ஜான் பார்க்கர்க்கு 2010இல் ஊசி மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு கென்னத் யூஜின் ஸ்மித் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டபோது மரண ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கலால், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நேற்று nitrogen hypoxiaவால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
nitrogen hypoxia மரண தண்டனையால் கென்னத் யூஜின் ஸ்மி மரணிக்க சுமார் 22 நிமிடங்கள் ஆனதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டு நைதரசன் சயனைடு வாயுவைப் பயன்படுத்தி ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தற்போது, நைதரசனை வைத்து முதன்முறையாக அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் , அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan