’வணங்கான்’ பிரச்சினையை போட்டுடைத்த தயாரிப்பாளர்!
24 மாசி 2024 சனி 08:30 | பார்வைகள் : 8180
இயக்குநர் பாலாவோடு ஏற்பட்ட பிரச்சினைக் காரணமாக நடிகர் சூர்யா ‘வணங்கான்’ படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. உண்மையில் அவர்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்பது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போட்டுடைத்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் ஆரம்பகால சினிமா கரியரில் மிக முக்கியப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. ’நந்தா’, ‘பிதாமகன்’ போன்றப் படங்கள் சூர்யாவை வேறொரு கோணத்தில் காட்டியது. அதன்பிறகு கமர்ஷியல் ஹீரோவாகவும், கதையின் நாயகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் நடிகர் சூர்யா. இயக்குநர் பாலா ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’, ‘தாரை தப்பட்டை’, ‘நாச்சியார்’ என சில படங்கள் இயக்கினார். இவர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்கிய ‘வர்மா’ படமும் வெளியாகாமல் போனது. இடையில் அவருக்கு குடும்ப பிரச்சினையும் சேர்ந்து கொள்ளவே சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்தார் பாலா.
இப்படி இருக்கையில் இயக்குநர் பாலா- சூர்யா பல வருடங்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் மூலமாக இணைவதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட ப
டப்பிடிப்பும் நடந்து முடிந்தது. இந்த சூழ்நிலையில்தான், நடிகர் சூர்யா பாலா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு காரணம் என்ன என்பதை சூர்யா வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், காரணம் இதுவாகதான் இருக்கும் என பல செய்திகள் இணையத்தில் உலா வந்தது. சூர்யாவை பாலா அடித்தார் என்றும், கதையில் சில மாற்றங்களை சூர்யா சொன்னதை பாலா ஏற்கவில்லை என்றும் பலவாறு சொல்லப்பட்டது.
இதுகுறித்து தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதன்படி, ”சூர்யாவை பாலா அடித்திருப்பார் என்பது துளியும் உண்மை இல்லை. ஆனால், கதைக்காக செருப்பு இல்லாமல் ஓடவிட்டார் என்பது உண்மையாகக்கூட இருக்கலாம். ஏனெனில், தற்போது ‘வணங்கான்’ பட டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் அருண் விஜய் அப்படியான காட்சிகளில் நடித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சூர்யாவுக்கு இப்போது இருக்கும் மார்க்கெட்டும் ரசிகர்களும் வேறு உயரம். இந்தக் கதையில் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடும் என சூர்யா பாலாவிடம் சுமூகமாக பேசிவிட்டுதான் இதிலிருந்து விலகி இருக்கிறார். ஆனால், அருண் விஜய்க்கு இந்தப் படம் நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்” என்றார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan