Paristamil Navigation Paristamil advert login

பொது இடத்தில் ருவருக்கு மரண தண்டனையை விதித்த நாடு

பொது இடத்தில் ருவருக்கு மரண தண்டனையை விதித்த நாடு

23 மாசி 2024 வெள்ளி 17:01 | பார்வைகள் : 7045


ஆப்கானிஸ்தானில்  இரண்டு பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றியுள்ளனர்.

கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் கொல்லப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எதையும் தலிபான்கள் வெளியிடவில்லை.

தலிபான்களின் தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சாடா பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அங்குள்ள உள்ளூர் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்