கனடாவில் பாரியளவு பரவி வரும் காட்டுத் தீ...

23 மாசி 2024 வெள்ளி 04:52 | பார்வைகள் : 7092
கனடாவில் இந்த ஆண்டில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகும் சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பருவ காலத்தில் காட்டுத் தீ ஆபத்தானதாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளது.
அவசர ஆயத்த அமைச்சர் ஹார்ஜிட் சஜ்ஜான் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாகாண அரசாங்கங்களின் அவசர ஆயத்த அமைச்சர்களுக்கும் மத்திய அரசாங்க பிரதிநிதிகளும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண அரசாங்கங்கள் காட்டுத் தீ கட்டுப்படுத்தல் குறித்த சகல வளங்களையும் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டில் கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு காட்டுத் தீ பரவுகை ஏற்பட்டு பெரும் அழிவுகளை கனடாவின் சில மாகாணங்கள் எதிர்நோக்கியிருந்தன.
கியூபெக், அல்பேர்ட்டா போன்ற மாகாணங்களில் கடுமையான காட்டுத் தீ அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025