Aulnay-sous-Bois : புயல் காரணமாக பாடசாலை கூரைகள் சேதம்!

22 மாசி 2024 வியாழன் 21:05 | பார்வைகள் : 16288
இன்று வீசிய கடும் புயல் காரணமாக Aulnay-sous-Bois நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன.
Ormeteau ஆரம்ப பாடசாலையின் கூரைகளே இடிந்து விழுந்துள்ளன. இன்று காலை வீசிய பலத்த புயலில் அருகில் இருந்த மூன்று மரங்கள் முறிந்து விழுந்ததில் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை மரங்கள் வெட்டப்பட்டு கூரைகள் சரிசெய்யப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல் குறித்த பாடசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
சம்பவத்தின் போது அதிஷ்ட்டவசமாக மாணவர்கள் எவரும் பாடசாலையில் இருக்கவில்லை எனவும் இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.