tempête Louis : 90,000 வீடுகளுக்கு மின் தடை! - ஒருவர் பலி!
22 மாசி 2024 வியாழன் 19:24 | பார்வைகள் : 12292
லூயி புயல் (e la tempête Louis காரணமாக நாட்டில் உள்ள 90,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணி அளவிலான நிலவரம் இது. பலத்த புயல் காரணமாக மர முறிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், மின் தடையும் ஏற்பட்டுள்ளதாக Enedis அறிவித்துள்ளது. திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும், நாளை நண்பகலுக்கு பின்னரும் ஓரிரு இடங்களில் மின் தடை நீடிக்கும் எனவும், திருத்தப்பணிகள் சவாலானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aiguille du Midi தொடருந்து நிலையத்தில் அதிகபட்சமாக மணிக்கு 152 கி.மீ வேகத்தில் புயல் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, Deux-Sèvres நகரில் வாகன சாரதி ஒருவர் புயலில் சிக்குண்டு பலியாகியுள்ளார். பாரிய மரம் ஒன்று முறித்து மகிழுந்தின் மீது விழுந்ததில், உடல் நசுங்கி அவர் பலியானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan