Paristamil Navigation Paristamil advert login

ராயன் படத்தின் கதை இதுவா?

ராயன் படத்தின் கதை இதுவா?

22 மாசி 2024 வியாழன் 16:05 | பார்வைகள் : 4659


தனுஷ் இயக்கி, நடித்துள்ள அவரது 50வது படம் 'ராயன்' . இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. ராயன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராயன் அவரது தம்பிகளுடன் பாஸ்ட் புட் கடையை நடத்தி வருகின்றார். அந்த சமயத்தில் ராயனின் கடந்தகால வாழ்க்கை குறித்து தெரியவருகிறது. அதன்பிறகு ராயன் வாழ்க்கையில் நடைபெறும் திருப்பம் தான் மீதி கதை. இதில் அண்ணன், தம்பி, தங்கை சென்டிமென்ட்களுக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்