Paristamil Navigation Paristamil advert login

கொவிட் தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள்  -  அதிர்ச்சி தகவல்

கொவிட் தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள்  -  அதிர்ச்சி தகவல்

22 மாசி 2024 வியாழன் 09:29 | பார்வைகள் : 4895


சர்வதேச அளவில் தற்போது காணப்படும் நோய்கள் உடல்பாதிப்புகளிற்கு கொரோனா தடுப்பூசிகளே காரணமாகயிருக்கலாம் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கொவிட் பெருந்தொற்றுகாலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய தடுப்பூசிகளே  தற்போது பலநாடுகளில் காணப்படும் பல நோய்களிற்கு காரணமாகயிருக்கலாம் என்பது குளோபல் வக்சின் டேட்டா நெட்வேர்க் என்ற அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியா கனடா உட்பட எட்டு நாடுகளில் சுமார் 100 மில்லியன் மக்களை இந்த அமைப்பு ஆய்விற்குட்படுத்தியுள்ளது.

வக்சின் சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொவிட் தடுப்பூசிகளிற்கும் சில மருத்துவநிலைகளிற்கும் இடையில்  தொடர்பிருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

தடுப்பூசி காரணமாக நரம்பியல் இரத்தம் இதயம் தொடர்பான பாதிப்புகள்ஏற்பட்டுள்ளன என ஜிவிடிஎன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மொடேர்னா தடுப்பூசி  போட்டவர்களிற்கு மயோகார்டிடிஸ் எனப்படும் இதய தசை பாதிப்பு ஏற்படுவது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை தடுப்பூசிகள் மூளையில் இரத்த உறைவு மற்றும் நரம்பியல் கோளாறு ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 முதுகுத்தண்டு வீக்கம் மூளை மற்றும் முதுகுதண்டு வடத்தில் வீக்கம்  போன்றவை மொடேனா தடுப்பூசி பயன்படுத்தியவர்கள் மத்தியில் காணப்படுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்