Paristamil Navigation Paristamil advert login

யாழில் காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகைகள் கொள்ளை

யாழில் காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகைகள் கொள்ளை

22 மாசி 2024 வியாழன் 09:02 | பார்வைகள் : 7624


யாழ்ப்பாணத்தில் காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆண் ஒருவரும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவருமே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் 29 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில், வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று (21) யாழ்ப்பாணத்தில் 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் 25 பவுண் நகையுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வல்வெட்டித்துறை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுனர்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்