துனீசியா கடற்பகுதியில் பயணித்த படகு விபத்து! 9 பேர் பலி
                    21 மாசி 2024 புதன் 14:43 | பார்வைகள் : 10641
லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று துனீசியா கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும்  பங்களாதேஷைச் சேர்ந்த சுமார் 53 பேர் குறித்த படகில் பயணித்துள்ள நிலையில்  அவர்களில்  பலர் காணமற் போயுள்ளனர்.
அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களில் 8 பேர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பாகிஸ்தானியர் எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan