Paristamil Navigation Paristamil advert login

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி

21 மாசி 2024 புதன் 08:39 | பார்வைகள் : 10037


ஆசியாவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி சிங்கப்பூரில் (20.02.2024) ஆம் திகதி தொடங்கியது.

உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

முதல் நாள் (20.02.2024)  சீனாவைச் சேர்ந்த கோமாக் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களின் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் ரஷிய நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால், உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் நடப்பாண்டுக் கண்காட்சியில் அந்த நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் கூட பங்கேற்கவில்லை.

ஆனால், காஸா போர் தீவிரமாக நடைபெற்றும் சூழலிலும் இந்தக் கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்கள் பங்கேற்று தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின.

வர்த்தக‌ விளம்பரங்கள்