Euromillions : €73.5 மில்லியன் யூரோக்கள் வென்ற பிரெஞ்சு நபர்!
21 மாசி 2024 புதன் 07:11 | பார்வைகள் : 17917
பிரான்சைச் சேர்ந்த ஒருவர் Euromillions அதிஷ்டலாபச்சீட்டில் €73.5 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளார்.
நேற்று பெப்ரவரி 20 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த சீட்டிழுப்பில் இத்தொகை வெல்லப்பட்டுள்ளதாக Euromillions அதிஷ்டலாபச்சீட்டின் தாய் நிறுவனமான Française des Jeux அறிவித்துள்ளது.
23, 31, 37, 42 மற்றும் 48 ஆகிய இலக்கங்களுடன், 3 மற்றும் 7 நட்சத்திர குறியீடு இலக்கங்களும் கொண்ட பற்றுச்சீட்டுக்கே இந்த அதிஷ்ட்டத்தொகை வெல்லப்பட்டுள்ளது. இந்த பற்றுச்சீட்டினை கொண்டுள்ளவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் தங்களது பணத்தை உரிமை கோரலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Euromillions அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் ஐரோப்பாவின் ஒன்பது நாடுகள் பங்கேற்கின்றன. அதில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அதிகளவான வெற்றிவாய்ப்புகளை பெறும் நாடுகளாக உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan