Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உக்ரேனில் ஜனாதிபதி மக்ரோன் படுகொலை செய்யப்படலாம்! - இரஷ்யா கிளப்பிய வதந்தி!

உக்ரேனில் ஜனாதிபதி மக்ரோன் படுகொலை செய்யப்படலாம்! - இரஷ்யா கிளப்பிய வதந்தி!

21 மாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 8803


ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் உக்ரேனில் வைத்து படுகொலை செய்யப்படலாம் என இரஷ்யா வதந்தி ஒன்றை பரப்பி வருகிறது. 

France 24 ஊடகம் வெளியிட்டதாக ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, உக்ரேனுக்கு பயணமாக இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார் எனவும் அவர் அங்கு வைத்து படுகொலை செய்யப்படலாம் எனவும் குறித்த செய்தி தெரிவிக்கிறது.

இரஷ்யாவில் வேகமாக இச்செய்தி பரவி வருவதை அடுத்து, குறித்த France 24 செய்திச் சேவை அதனை நிராகரித்துள்ளது. அதுபோன்ற செய்தியினை France 24 வெளியிடவில்லை எனவும், அது போலியான செய்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மார்ச் நடுப்பகுதிக்கும் கீவ் நகருக்கு பயணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்