Paristamil Navigation Paristamil advert login

'துணிவு' பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

'துணிவு' பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

20 மாசி 2024 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 8200


அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவான ’துணிவு’ திரைப்படத்தில் சுனில் தத்தா என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ரித்துராஜ் சிங் காலமானார். இதனை அடுத்து பாலிவுட் திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

பாலிவுட் நடிகரான ரித்துராஜ் சிங் ‘துணிவு’ திரைப்படத்தில் ஜான் கொக்கனுடன் இணைந்து வங்கி பணத்தை திருடுபவர்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பதும் அஜித்துக்கும் இவருக்கும் ஆக்ரோஷமான ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்பதும் படம் பார்த்தவர்கள் தெரிந்ததே.

’துணிவு’ படம் மட்டுமின்றி சில பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் ஹிந்தி சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரித்துராஜ் சிங் கடந்த சில நாட்களாக கணையம் அழற்சி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ரித்துராஜ்சிங் அவர்களுக்கு வயது 59 என்பது குறிப்பிடத்தக்கது

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்