பீர்பாலின் மகள்
3 ஆவணி 2023 வியாழன் 09:59 | பார்வைகள் : 5503
ஒருநாள் அரசவைக்கு பீர்பால் தன்னோட மகளை கூட்டிகிட்டு போனாரு ,
அவளை பாத்ததும் அரசர் அவரு பக்கத்துலயே உக்கார வச்சிக்கிட்டாரு
ரொம்ப நேரம் ஆகியும் எதுவுமே பேசாமல் இருந்தா அந்த பொண்ணு
ஏன் பாப்பா எதுவுமே பேசாம இருக்கன்னு கேட்டாரு அரசர்
அதுக்கு அந்த பொண்ணு சொன்னா நான் எப்பவும் பெரியவங்க கிட்ட குறைவாவும் ,சின்னவங்க கிட்ட அதிகமாவும் பேசுவேன்னு சொன்னா
இது என்ன புது பழக்கமா இருக்கே எப்பவும் சுருங்க சொல்லி விளங்க வைக்கணும்னு பெரியவங்க சொல்லுவாங்க அத தான் நீ தவறா புரிஞ்சிகிட்டியானு கேட்டாரு
எனக்கு அந்த பழமொழியும் தெரியும் ,இருந்தாலும் பெரியவங்க கிட்ட பேசுறப்ப அமைதியா இருந்தா அவனுங்க சொல்லுற நல்ல விஷயங்களை சுலபமா புரிஞ்சிக்க முடியும் ,அதேநேரத்துல நாம சின்னவங்க கிட்ட பேசுறப்ப நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை அவுங்களுக்கு சொல்லும்போது நிறய பேசணும்
இதைத்தான் எங்க அப்பா சொல்லி கொடுத்திருக்காருனு சொன்னா அந்த பொண்ணு ,இத கேட்ட அரசருக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சி போச்சு
அவளுக்கு நிறய பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பி வச்சாரு அக்பர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan