போதைவஸ்தாக கள்ளச்சந்தையில் விற்கப்படும் மாத்திரைகள். உங்கள் பிள்ளைகள் மீது அவதானம்.

20 மாசி 2024 செவ்வாய் 08:40 | பார்வைகள் : 10160
நோய்க்கு மருந்தாக தயாரிக்கப்படும் மருந்து மாத்திரைகள், போதைவஸ்தாக இளையோரால் பாவிக்கப்படுகிறது, இதனால் குறித்த பல மாத்திரைகள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படுகிறது, அவை கள்ளச்சந்தைகளில் விற்கப்படுகிறது.
அது மாத்திரமன்றி போலியான மருந்துச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு மருந்தகங்களிலும் வாங்கப்படுகிறது. பிரான்சில் குறித்த சில மருந்துகளை மருத்துவரின் அனுமதி இன்றி பாவிப்பதோ, வாங்குவதோ, வைத்திருப்பதோ குற்றச் செயலாகும். மீறினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 7 லட்சம் யூரோக்கள் குற்றப் பணமும் அறவிடப்படும்.
பல இளையோர்கள் பெற்றோருக்கு மருந்து எடுக்கிறோம் என கூறி, மருந்து மாத்திரைகளை போதைவஸ்தாக உட்கொள்கிறார்கள் என்றும், அவை உயிருக்கு ஆபத்தான செயல் என்றும் எனவே பெற்றோர்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1