டி20 கிரிக்கெட்டில் மலிங்காவுக்கு பின் சாதனை படைத்த இலங்கை வீரர்!
20 மாசி 2024 செவ்வாய் 07:54 | பார்வைகள் : 8199
இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வணிந்து ஹசரங்கா டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இலங்கை அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 187 ஓட்டங்கள் குவித்தது. சமரவிக்ரமா 51 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 42 ஓட்டங்களும் விளாசினர்.
அதன் பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 115 ஓட்டங்களில் சுருண்டது. கேப்டன் ஹசரங்கா, மேத்யூஸ், பத்திரனா மற்றும் பினுரா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இந்த சாதனையை படைத்த இரண்டாவது இலங்கை வீரர் ஹசரங்கா ஆவார். இதற்கு முன்பு லசித் மலிங்கா (107) இந்த சாதனையை செய்திருந்தார்.
அவர் 84 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த நிலையில், ஹசரங்கா 63 போட்டிகளிலேயே எட்டியுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan