யாழில் அதிசொகுசு சுற்றுலா கப்பல் தயாரிப்பு!

20 மாசி 2024 செவ்வாய் 04:10 | பார்வைகள் : 5594
யாழ்ப்பாணம் காரைநகரில் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் தயாரிக்கப்பட்ட்டுள்ளது.
அதாவது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவெளை யாழில் தயாரிக்கப்பட்ட இந்த சொகுசு கப்பல் சூரிய மின் சக்தி வசதியை கொண்டதாகும்.
குறித்த கப்பலின் பரீட்சார்த்த பயணம் யாழ்ப்பணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன் இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் – காரைநகரில் இவ்வாறான ஓர் கப்பல் கட்டும் தொழில்சாலை உள்ளமை யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்க்கும் ஓர் விடயமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025