Paristamil Navigation Paristamil advert login

Saint-Cloud சுரங்கம் அருகே கோர விபத்து! - மூவர் பலி!

Saint-Cloud சுரங்கம் அருகே கோர விபத்து! - மூவர் பலி!

19 மாசி 2024 திங்கள் 18:00 | பார்வைகள் : 8374


A13 நெடுஞ்சாலையில் உள்ள Saint-Cloud (Hauts-de-Seine மாவட்டம்) சுரங்கத்துக்கு அருகே இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பெப்ரவரி 19, திங்கட்கிழமை காலை 5 மணி அளவில் இவ்விபத்து Porte d'Auteuil பகுதிக்கும் Saint-Cloud சுரங்கத்தின் வெளியேற்ற பகுதிக்கும் (sortie du tunnel de Saint-Cloud) இடையே பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மகிழுந்தில் பயணித்த நால்வரில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நான்காவது நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

விபத்தை அடுத்து பல கிலோமீற்றர் தூரத்துக்கும் மேமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினரின் பெரும் முயற்சியின் பின்னர் வீதி வழமைக்குத் திரும்பியது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்