இலங்கையில் கோர விபத்து - ரயில் மோதியதில் மூவர் பலி

19 மாசி 2024 திங்கள் 13:43 | பார்வைகள் : 5021
ஆராச்சிக்கட்டுவ மஹய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஆரச்சிக்கட்டுவ மற்றும் ஆனவிழுந்தாவ உப புகையிரத நிலையங்களுக்கு இடையிலான மஹய்யாவ குறுக்கு வழியில் புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.