Paristamil Navigation Paristamil advert login

'கங்குவா' படம் எப்படி இருக்கு? சூர்யா கொடுத்த ரியாக்ஷன்.!

'கங்குவா' படம்  எப்படி இருக்கு? சூர்யா கொடுத்த ரியாக்ஷன்.!

19 மாசி 2024 திங்கள் 11:17 | பார்வைகள் : 6546


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூர்யா.‘சூரரைப்போற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் மிரட்டும் வில்லனாக சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தாலும் கூட, அவரது ரோலக்ஸ் கதாபாத்திரம் இன்றும் பேசப்படுகிறது.

அடுத்தடுத்த படங்களில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரமாண்ட படைப்பான ‘கங்குவா’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.இதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா.

மிக பிரமாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா திரைப்படம்.வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர்.படத்தின் போஸ்டர்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பதை எகிறவைத்தது.

சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்தப் படம் முக்கியமான மற்ற படங்களின் ரிலீஸ் டேட்களையும் பரிசீலித்த பிறகே ரிலீஸ் தேதி இறுதி செய்யப்படும் என்றும் படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா  பத்து விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே இந்த படத்தின் முழு அவுட்டையும் பார்த்துள்ள நடிகர் சூர்யா மிகுந்த திருப்தி அடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்