Paristamil Navigation Paristamil advert login

துறைமுகப் பகுதியில் மீட்கப்பட்ட உடலங்கள் - விசாரணை ஆரம்பம்!!

துறைமுகப் பகுதியில் மீட்கப்பட்ட உடலங்கள் - விசாரணை ஆரம்பம்!!

18 மாசி 2024 ஞாயிறு 16:36 | பார்வைகள் : 7419


47 மற்றும் 52 வயதுடைய இருவரின் உடலங்களை Trébeurden (Côte-d'Armor) துறைமுகப்பகுதியில் நீரிற்குள் இருந்து, ஜோந்தார்மினர் மீட்டுள்ளனர்.

இவர்களின் சாவிற்கான காரணங்கள் எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. ஜோந்தார்மினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

47 வயதுடையவரின்  உடலம், நேற்றுப் பகல் இந்தப் பகுதியில் உள்ள நீச்சல் நிலையப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இவர் பிரெஸ்ட் நகரத்தில் வசிப்பவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது

பின்னர் 17h00 மணியளவில் 52 வயதுடைய இரண்டாவது நபரின் உடலம் நீரில் மிதக்கத் தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவரின் உடலில் எந்தவிதக் காயங்களோ, சந்தேகத்திற்கிடமான அடையாங்களோ இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனவும் தெரிவித்த காவற்துறையினர்,ரென் சட்டவியல் மருத்துவ நிறுவனத்தில் நடாத்தப்பட உள்ள உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே, மேலதிகத் தவகல்கள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்