பிறந்தநாளில் அசத்திய சிவகார்த்திகேயன்!
17 மாசி 2024 சனி 13:59 | பார்வைகள் : 6317
தன்னுடைய பிறந்தநாளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே23’ படக்குழுவினருக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்.
’அமரன்’ படத்தை அடுத்து தன்னுடைய 23வது படத்தில் பிஸியாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழில் ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே23’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் இவர். இந்தப் படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்தது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி நடிக்கிறார்.
’எஸ்கே23’ படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் இன்று தனது 38வது பிறந்தநாளை ‘எஸ்கே23’ படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் தடபுடலான பிரியாணி விருந்து வைத்தும் அசத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan