Paristamil Navigation Paristamil advert login

காசா மற்றும் எகிப்து எல்லை பகுதிகளில் எழுப்பப்படும் சுவர்

காசா மற்றும் எகிப்து எல்லை பகுதிகளில் எழுப்பப்படும் சுவர்

17 மாசி 2024 சனி 09:26 | பார்வைகள் : 8025


இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில்  காஸாவிலிருந்து வரும் பாலஸ்தீன அகதிகளின் வருகையைத் தடுக்க எகிப்து தனது எல்லையில் சுவர் எழுப்பி வருகிறதாக கூறப்படுகின்றது.

பாலஸ்தீன நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் எகிப்தின் சினாய் தீபகற்பப் பகுதியில் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் அகதிகளின் வருகையைத் தடுக்கும் வகையில் எகிப்து சுவர் எழுப்பி வருகின்றது.

அதன்படி எகிபுது தனது எல்லைப் பகுதியில் 23 அடி உயரத்திற்கு பிரமாண்ட சுவரை எகிப்து எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காசா மக்கள் வருகையை தடுக்க எகிப்தின் சுவர் கட்டும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்