Paristamil Navigation Paristamil advert login

பெரிய மலைப் பாம்புகளுக்கு நடுவே அமர்ந்து சாகசம் காட்டிய மனிதர்

பெரிய மலைப் பாம்புகளுக்கு நடுவே அமர்ந்து சாகசம் காட்டிய மனிதர்

17 மாசி 2024 சனி 09:15 | பார்வைகள் : 3493


கண்ணாடி பெட்டிக்குள் பெரிய பெரிய மலைப் பாம்புகளுக்கு நடுவே மனிதர் ஒருவர் படுத்து இருப்பது இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிருகக்காட்சிசாலை காப்பாளர் ஜே ப்ரூவர்(zoo keeper Jay Brewer) என்பவர் கண்ணாடி பெட்டிகளுக்குள் பெரிய பெரிய மலைப்பாம்புகள் மத்தியில் படுத்து இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

  இந்த வீடியோ சமூக ஊடக பயனாளர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, தங்கள் கண்களை நம்பாமல் பயனர்கள் சிலர் மீண்டும் ஒரு முறை இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவின் கீழே கருத்து பதிவிட்டுள்ள மிருகக்காட்சிசாலை காப்பாளர் ஜே ப்ரூவர், இந்த அருமையான நாளில் என்னிடம் உள்ள மிகப்பெரிய பாம்புகளை உங்களுக்காக வெளிக் கொண்டு வர விரும்பினேன், இந்த பாம்புகள் அனைத்தையும் சிறு வயது முதலே வளர்த்து வருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாம்புகள் ஜே ப்ரூவரின் உடல் முழுவதையும் மூடி இருப்பதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ 27.4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்