Paristamil Navigation Paristamil advert login

 ரஷ்ய மக்களுக்கு  ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

 ரஷ்ய மக்களுக்கு  ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

17 மாசி 2024 சனி 08:33 | பார்வைகள் : 6174


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது மக்களை மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறும்   ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருப்பது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  

 2022 ஆம் ஆண்டில், ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில்   போரினால் ஏராளமான ரஷ்யர்கள் இறந்துள்ளனர், மேலும் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில்  “ஒரு தேசமாக வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டும். 

ஒரே ஒரு குழந்தை இருந்தால், எங்கள் மக்கள் தொகை குறையும்…” என்றும் ரஷ்ய ஜனாதிபதி தொழிற்சாலை தொழிலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவின் மக்கள் தொகை 146.4 மில்லியனாக இருந்ததாக  கூறப்படுகின்றது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்