Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

16 மாசி 2024 வெள்ளி 16:14 | பார்வைகள் : 8550


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(16) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 307 ரூபாய் 70 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 21 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 76 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 318 ரூபாய் 06 சதமாக காணப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்