Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

யாழில் ஐஸ் கிறீமில் தவளை - குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்கு 5000 ரூபாய் அபராதம்!

யாழில் ஐஸ் கிறீமில் தவளை - குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்கு 5000 ரூபாய் அபராதம்!

16 மாசி 2024 வெள்ளி 14:40 | பார்வைகள் : 5928


யாழ்ப்பாணம் - செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ் கிறீமிற்குள் இறந்த தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஆலய சூழலில் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம், கொள்வனவு செய்தவரின் குளிர்களிக்குள் இறந்த நிலையில் தவளை ஒன்று கிடந்துள்ளது.

அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் குளிர்களி விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விற்பனை செய்தவர், சுன்னாகம் பகுதியில் இயங்கும் குளிர்களி தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே, ஆலய சூழலில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் நடத்தி செல்லப்பட்ட உணவகம் ஒன்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 36,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலயத்திற்கு தினமும் வழிபாட்டிற்காகவும், சந்நிதி ஆலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்காகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர்.

அவர்கள் ஆலய சூழலில் உள்ள உணவகங்களில் சிற்றுண்டிகள், குளிர்பானங்களை கொள்வனவு செய்கிறனர்.

அதனால், ஆலய சூழலில் உள்ள உணவகங்கள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களின் சுகாதாரத்தை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்