இலங்கை இளம் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்!
16 மாசி 2024 வெள்ளி 13:14 | பார்வைகள் : 6695
இளம் மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த ஆர் . நிமேஷா மதுஷானி என்ற 23 வயதுடைய பெண்ணாவார்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்பில் 32 வயதான கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவன் தனது மனைவியின் தலையில் ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan