ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயன்ற தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
2 ஆவணி 2023 புதன் 11:12 | பார்வைகள் : 9639
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலி வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan