RER A தொடருந்தில் காவல்துறை வீரரின் மனைவி மீது தாக்குதல்!!

16 மாசி 2024 வெள்ளி 10:06 | பார்வைகள் : 14390
காவல்துறை வீரர் ஒருவரின் மனைவி மீது RER A தொடருந்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை Marne-la-Vallée Chessy தொடருந்து நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தனது குழந்தையுடன் தொடருந்தில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பெண்ணை அதே தொடருந்தில் பயணித்த நான்கு நபர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரு தடவைகள் அவரை தள்ளி விழுத்தியதுடன், அவரை தாக்கியும் உள்ளனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறை வீரரை பழிவாங்கும் நோக்கோடு அவரது மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகிறது.
தாக்குதல் நடத்திய அனைவரும் மறுநாள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 16 தொடக்கம் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1