குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான அறிகுறிகள்... WHO தகவல்

16 மாசி 2024 வெள்ளி 09:51 | பார்வைகள் : 10223
ஒவ்வொரு வருடமும் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக வாழ்வியல் மாற்றங்கள், உடல் எடை, மது, புகைபழக்கம் போன்ற காணரங்களால் பெரியவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது.
ஆனால், குழந்தைகளுக்கு எதனால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான அறிகுறிகள், காரணம் உள்ளிட்டவற்றை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டிருக்கிறது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 18 வயதுக்குள் இருக்கும் நான்கு லட்சம் பேர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக குழந்தைகளுக்கு Leukemia, brain cancers, neuroblastoma, lymphomas, தசை மற்றும் வயிற்றுப் பகுதியில் வரும் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
மேலும், மரபணு வழியாக 10 சதவீத குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு, மலேரியா, டைபாய்டு போன்ற தொற்றுகளால் குழந்தைகள் புற்றுநோய் ஏற்படலாம் என்று WHO கூறியுள்ளது.
அதீத காய்ச்சல், உடல் எடை குறைவது அல்லது அதிகரிப்பது, உடலில் ஏற்படும் சில மாற்றங்கள், எலும்பு, மூட்டு வலி, நரம்பு பிரச்னைகள், தலைவலி, தொடர் வாந்தி, வயிறு, இடுப்பு பகுதி, உள்ளூறுப்புகளில் கட்டிகள், பார்வை குறைபாடு, இமை வீக்கம் ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்தாலே குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
தீவிரமடைந்து கீமோதெரபி சிகிச்சை செய்யும் அளவுக்குப் போய்விட்டால் தான் மிகவும் சிரமம்.
குழந்தைகளுக்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மூலம் புற்றுநோய்களை குணப்படுத்த முடியும்.
மேலும், கர்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் குணப்படுத்தமுடியும். 9 முதல் 26 வயதுடையவர்கள் Cervavac தடுப்பூசியை பயன்படுத்தலாம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1