Paristamil Navigation Paristamil advert login

PSG கழகத்தில் இருந்து வெளியேறுகிறார் Kylian Mbappé!!

PSG கழகத்தில் இருந்து வெளியேறுகிறார் Kylian Mbappé!!

16 மாசி 2024 வெள்ளி 08:18 | பார்வைகள் : 6609


பரிஸ் கழகத்தின் நட்சத்திர வீரர் Kylian Mbappé, தனது வெளியேற்றத்தை அறிவித்துள்ளார்.

வரும் ஜூன் மாதத்துடன் PSG கழகத்துடனான அவரது ஒப்பந்தம் நிறைவடைகிறது. ஒப்பந்தம் நீடிப்பது தொடர்பில் கழகம் மற்றும் Kylian Mbappé தரப்பில் ஆர்வம் காட்டாத நிலையில், கழகத்தை விட்டு வெளியேற அவர் தீர்மானித்துள்ளார். இதனை PSG கழகத்தின் தலைவரும், கட்டாரைச் சேர்ந்த பிரபல வர்த்தகருமான Nasser Al-Khelaïfi நேற்று அறிவித்தார்.

அதேவேளை, 25 வயதுடைய Kylian Mbappé விரைவில் Real Madrid கழகத்துக்காக விளையாடுவார் என செய்திகள் வெளியாகியுள்ள போதும், இதுவரை அத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்