Yvelines : நடைபயிற்சில் ஈடுபட்டிருந்த பெண் மீது பாலியல் தாக்குதல்!
15 மாசி 2024 வியாழன் 16:18 | பார்வைகள் : 22572
Carrières-sous-Poissy (Yvelines) பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு பின்னால் சென்று அவரை கட்டியணைத்து கீழே விழுத்திய நபர் ஒருவர், அவரை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட 26 வயதுடைய குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan