Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தாக்குதல்! – ஒருவர் பலி...!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு தாக்குதல்! – ஒருவர் பலி...!

15 மாசி 2024 வியாழன் 10:12 | பார்வைகள் : 7099


அமெரிக்காவின் கன்சாஸ் நகரில்   துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நகரில் நடைபெற்ற அணிவகுப்பின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றதுடன் காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்