வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின்... ஜோடி நயன்தாராவா..?

15 மாசி 2024 வியாழன் 09:19 | பார்வைகள் : 5550
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது ’விடுதலை 2’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ‘தளபதி 69’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் ’வாடிவாசல்’ தள்ளி போகும் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் ஒரு பக்கம் வரிசையாக படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோகன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கவின், நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக நடிப்பார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை என்றாலும் இருவருக்குமே சம அளவிலான முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்று கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.