துருக்கியின் தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு - 9 பேர் பலி

14 மாசி 2024 புதன் 15:20 | பார்வைகள் : 11429
துருக்கியின் எர்சின்கான் மாகாணத்தில் உள்ளது இலிக் நகரம். இங்கு கோப்லர் என்ற தங்கச்சுரங்கம் இயங்கி வருகிறது.
மலைப்பாங்கான இந்த பகுதியில் நேற்று பகல் 2.30 மணி அளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, மணல் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
அப்போது பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தையும் மண் மூடியது.
இந்த காட்சி ஒரு தொழிலாளியால் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கத்தில் 9 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மண்ணில் புதைந்த அவர்களின் நிலை என்ன ஆனது என்பது உடனடியாக தெரியவந்துள்ளது.
மண்ணில் புதைந்த அவர்களின் நிலை என்ன ஆனது என்பது உடனடியாக தெரியவில்லை.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025