பச்சை காய்கனிகளை சாப்பிட்டு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
2 ஆவணி 2023 புதன் 08:15 | பார்வைகள் : 11066
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (வயது 39) என்ற பெண் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஹனா சம்சனோவா அங்கு கிடைக்கும் காய்கனிகளை உண்பது மற்றும் அதன் பலன்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
இதனிடையே ஹனா சம்சனோவா கடந்த சில மாதங்களாக தனது உணவு பழக்க முறையில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இதன் காரணமாக அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஹனா சம்சனோவா கடந்த 21-ம் திகதி உயிரிழந்துள்ளார்.
பட்டினி மற்றும் சோர்வு காரணமாக ஹனா சம்சனோவா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பச்சை காய்கனிகளை தொடர்ச்சியாக சாப்பிட்டதால் உடல் ஒத்துழைக்காமல் தொற்று ஏற்பட்டு ஹனா உயிரிழந்திருக்கலாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தனது மகளின் உடலை ரஷ்யாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளும்படி ஹனாவின் தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan