வரும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் TGV சேவைகள் இரண்டில் ஒன்று. SNCF.
14 மாசி 2024 புதன் 08:08 | பார்வைகள் : 9142
பிரான்சில் பாடசாலை விடுமுறையில் Zone C பகுதியின் இரண்டாம் வாரத் தொடக்கமும், Zone A பகுதியின் முதல் வாரத் தொடக்கமும் அமையும். வரும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் TGV எனப்படும் தொடரூந்து சேவைகளின் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் குறித்த சேவைகள் அனைத்தும் இரண்டுக்கு, ஒன்று எனும் கணக்கிலேயே சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பிரான்ஸ் நாட்டவர்கள் இந்த விடுமுறையின் போது தூர இடங்களில் இருக்கும் பனிச்சறுக்கு நிலையங்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர்கள், இவர்களே குறித்த தொடரூந்து சேவைகளின் வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிப்படையவுள்ளனர்.
பயணங்களை தொடங்கும் முன்னர் உங்களின் TGV சேவைகள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதனை உறுதிப்படுத்தல் அவசியம் என SNCF சேவை, பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan