ஆறு தடவைகள் கத்திக்குது இலக்கான நபர்! - பரிசில் சம்பவம்!

13 மாசி 2024 செவ்வாய் 17:06 | பார்வைகள் : 12044
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் நபர் ஒருவர் ஆறு தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
35 வயதுடைய ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். rue de la Tombe-Issoire வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.20 மணி அளவில் வீதியின் அருகே நடந்து சென்ற ஒருவரை வழிமறித்த ஆயுததாரி ஒருவர், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ஆறு தடவைகள் கத்தியால் தாக்கப்பட்டதில், அவர் படுகாயமடைந்துள்ளார். SAMU மருத்துவர்கள் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாக்குதலாளி சில நிமிடங்களின் பின்னர் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
தாக்குதலாளி மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சிறு வயது முதலே நன்கு நெருங்கிய நண்பர்கள் எனவும், கிறிஸ்தவ, யூத மத வாக்குவாதம் ஒன்றே தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025