ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபாதி திருமணம் எங்கே?

13 மாசி 2024 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 9724
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவலகள் பரவி வந்தன. இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி இருவருக்கும் சென்னை கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் பண்ணை இல்லத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025