வாடிவாசல்' டிராப் இல்லையா?
 
                    13 மாசி 2024 செவ்வாய் 10:13 | பார்வைகள் : 5726
சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஒரு கருத்தும், அந்த படம் ட்ராப் என்று ஒரு கருத்தும் திரையுலகில் பரவி வரும் நிலையில் சூர்யா அடிக்கடி சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் ‘வாடிவாசல்’ படம் டிராப் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் இருக்கும் நிலையில் அவர் ஹிந்தியில் ’கர்ணா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி ’கங்குவா’ படத்தை முடித்துவிட்டு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ படத்தில் உள்ளார்.
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் அறிவிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியானது என்பதும் கடந்த சில மாதங்களாக சூர்யா இந்த படத்தில் நடிக்க இருக்கும் காளையுடன் பழகி வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த காளை தற்போது சூர்யாவின் சென்னை வீட்டில் இருப்பதால் இந்த காளையை பார்க்க அவ்வப்போது சூர்யா சென்னை வருவதாகவும் அந்த காளையும் சூர்யாவுடன் தற்போது நன்றாக பழகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த ஆண்டுக்குள் கண்டிப்பாக ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்காகவே சென்னைக்கு காளையை பார்க்க அடிக்கடி சூர்யா வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை தளபதி விஜய்யின் ’தளபதி 69’ படத்தை இயக்கும் வாய்ப்பு வெற்றிமாறனுக்கு கிடைத்தால் மட்டுமே ‘வாடிவாசல்’ டிராப் அல்லது தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan