Paristamil Navigation Paristamil advert login

இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

12 மாசி 2024 திங்கள் 15:45 | பார்வைகள் : 5858


அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 13-ல் கைது செய்தது.  அவர் மீது 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அவரது ஜாமின் மனுக்கள்  ஏற்றுக்கொள்ளபடாமல் தள்ளுபடி யான நிலையில்   இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார்.   இருப்பினும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இன்று தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. 

செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவலை 19 முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது  சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை  அனுப்பி வைத்தார் செந்தில் பாலாஜி.

வர்த்தக‌ விளம்பரங்கள்