யாழில் பணி நீக்கத்தால் பெண்ணின் விபரீத முடிவு
12 மாசி 2024 திங்கள் 14:00 | பார்வைகள் : 15974
யாழ்ப்பாணத்தில் பணி இடமாற்றம் காரணமாக பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் உயிரை மாய்த்துள்ளார்.
சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதான பேரம்பலம் புனிதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் திருமணமாகாதவர் என தெரிய வந்துள்ளது.
இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது.
இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan